நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பானது கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு நாட்டு அதிகாரிகளும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தனர்.
இலங்கை வருகை குறித்து முன்னர் எக்ஸில் பதவிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர். இலங்கை தலைமையுடன் தமது ஈடுபாடுகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார்.