இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அமைதியான மற்றும் ஜனநாயகத் தேர்தலை நடத்தி, சுமுகமான ஆட்சி மாற்றத்தை உறுதி செய்ததற்காக இலங்கையைப் பாராட்டுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இரு நாடுகளும் கல்வி, பெண்களை வலுவூட்டுதல், சிறுவர் சுகாதாரம், சுதேச வாசிகளுக்கான பன்மொழி மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்தும் வீட்டு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன. முதலீட்டை ஈர்ப்பதற்காக இலங்கையில் பொருளாதார வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. மேலும், வினைத்திறனை மேம்படுத்த வரி சேகரிப்பு முறைகளை சீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.