ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்
அத்துடன் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்தும் ஆசி பெற்றார்
ஜனாதிபதி இன்று முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
செத் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு இதன்போது ஆசி வழங்கப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்
ஜனாதிபதி இன்று முற்பகல் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள ராமண்ய பீடத்திற்கு சென்று ஆசிபெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
அநுநாயக்க தேரர்கள், பதிவாளர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்
இதனையடுத்து ஜனாதிபதி தற்போதைய பொருளாதார அரசியல் நிலைமைகள் குறித்து மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தியிருந்தார்
வெளிநாட்டு தூதுவர்களை நியமிக்கும்போது, அறிவார்ந்த, பொறுத்தமானவர்களை நியமிக்குமாறும், ஆளுநர்களை நியமிக்கும்போது அரசியல் நோக்களுங்காக அன்றி பொறுப்பானவர்களை நியமிக்குமாறும் மகா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
அத்துடன் அமைச்சுக்களின் செயலாளர் பதவிக்கும் பொறுத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்
இதேவேளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட தீர்மானங்களை மேற்கொள்வதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்
அத்துடன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் உரிய மறுசீரமைப்புக்களை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்