போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஒருவர் பொரளை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபரிடமிருந்து 5,99,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் மொத்த பெறுமதி சுமார் 60 மில்லியன் ரூபா எனவும் தெரியவருகிறது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து சந்தேகநபர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.