இன்று (11) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, குறித்த பகுதியில் 239 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், எல்பிட்டியில் 194.75 மி.மீ, புலத்சிங்கள 187 மி.மீ, மத்துகம 186.5 மி.மீ மற்றும் சீதாவக்க பிரதேசத்தில் 184.5 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.