தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் (UNIFIL) இரண்டு நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் Merkava டேங்க் நகோராவில் உள்ள நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக லெபனான் செய்தி நிறுவனமான “Nna” தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்த தாக்குதலில் இலங்கை படையணியின் அங்கத்தினர் இருவர் காயமடைந்துள்ளதாகவும் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீதான இஸ்ரேலின் தாக்குதல் “சகித்துக் கொள்ள முடியாதது” மற்றும் மீண்டும் நடக்கக் கூடாது என்று ஐ.நா பொதுச் செயலாளர் Antonio Guterres கூறியுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ள இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார, தாக்குதலின் போது, இலங்கை இராணுவத்தினர் இருவரும் நகோரா கிராமத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முகாமில் இருந்ததாக கூறினார்.