ஜப்பானில் உள்ள நிஹான் ஹிடான்க்யோ அமைப்பு கடந்த 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது.
இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டதில் உயிர் தப்பியவர்களின் சமூகமாகும்.
இவர்கள், அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் பெரும் பங்காற்றியமைக்காக இந்தப் பரிசை பெற்றுள்ளனர்.
ஹிபாகுஷா என அழைக்கப்படும் குறித்த அமைப்பினர், அணு ஆயுதங்கள் உலகில் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.