டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் வியாழன் (10) அன்று, கலிபோர்னியாவில் நடந்த மிகவும் பரபரப்பான நிகழ்வில் நிறுவனத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ரோபோடாக்ஸி, சைபர்கேப் வாகனங்களை காட்சிப்படுத்தினார்.
இரண்டு இறக்கைகள் போன்ற கதவுகள் மற்றும் பெடல்கள் அல்லது ஸ்டீயரிங் எதுவும் இல்லாத தோற்றமுடைய வாகனம், டெஸ்லாவின் அடுத்த அத்தியாயத்தில் எலோன் மாஸ்க்கின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.
2026 இல் இந்த வாகன உற்பத்தி தொடங்கும் என்றும், இது 30,000 அமெரிக்க டொலர்களுக்கு குறைவான விலையில் கிடைக்கும்.
தன்னாட்சி வாகனங்கள் மனிதர்களால் இயக்கப்படும் வாகனங்களை விட 10 முதல் 20 மடங்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
நகரப் பேருந்துகளின் ஒரு மைலுக்கு 1 டொலர் என்ற விலையுடன் ஒப்பிடும்போது, ஒரு மைலுக்கு 0.20 டொலர்கள் வரை குறைந்த செலவில் இது இயங்கக்கூடியது என்றும் மாஸ்க் குறிப்பிட்டார்.