கடல் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் குஜராத் கடற்கரையில் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கி ஒரு மாதத்திற்கு பின்னர், காணாமல் போன இந்திய கடலோர காவல்படை விமானியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ALH MK-III ஹெலிகொப்டர் செப்டம்பர் 2 அன்று போர்பந்தருக்கு அப்பால் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பணியாளர்கள் காணாமல் போயிருந்தனர்.
இரண்டு பணியாளர்களின் உடல்கள் பின்னர் மீட்கப்பட்ட நிலையில், பணியின் கட்டளையில் இருந்த விமானி ராகேஷ் குமார் ராணாவை தேடும் பணி தொடர்ந்தது.
இந்த நிலையில் விமானியின் உடல் போர்பந்தருக்கு தென்மேற்கே 55 கி.மீ. தொலைவில் உள்ள கடலில் ஒக்டோபர் 10 ஆம் திகதி மீட்கப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை வெள்ளிக்கிழமை (11) தெரிவித்துள்ளது.