நோயல் டாடா, தனது மறைந்த ஒன்றுவிட்ட சகோதரர் ரத்தன் டாடாவுக்குப் பிறகு டாடா அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை டாடா அறக்கட்டளை கொண்டுள்ளது.
மும்பையில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டத்திற்குப் பின்னர் நோயல் டாடா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
67 வயதான நோயல், இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் மற்றும் INSEAD இன் சர்வதேச நிர்வாகத் திட்டத்தை முடித்தவர், டாடா குழுமத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவான ட்ரெண்டின் தலைவராக இருக்கிறார்.
மேலும், இவர் டாடா குழுமத்துடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்புடையவர்.
1892 இல் ரத்தன் டாடாவின் பெரியப்பா ஜம்செட்ஜி டாடாவால் அமைக்கப்பட்ட டாடா அறக்கட்டளை சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல், இடம்பெயர்வு, திறன் மேம்பாடு, விளையாட்டு மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.