பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுரங்க தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த 7 சுரங்கத் தொழிலாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.