பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் லீ கியான் இன்று பாகிஸ்தான் வந்தடைந்திருந்தார்
இன்னிலையில் இஸ்லாமாபாத் நகருக்கு மூன்று நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாநாட்டையொட்டி நகரில் உள்ள பாடசாலை மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், நகரின் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.