அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் தீர்க்கமான நடவடிக்கையாக, மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு (Mohamed Muizzu), பல்வேறு அமைச்சுகளில் இருந்து 228 அரசியல் நியமனங்களை நீக்குவதாக அறிவித்துள்ளார்.
இந்தத் அதிரடியான மற்றும் துணிச்சலான முடிவு, நாட்டின் பெருகிவரும் நிதி மற்றும் வெளிச் சவால்களை கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டது.
அதேநேரம், அவரது நிர்வாகத்தின் பெரும் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் முக்கியமான தூணாக அமைகிறது.
ஜனாதிபதி முய்ஸு தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கின் மூலம் செவ்வாய்க்கிழமை (15) இந்த முடிவை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அந்த அறிவிப்பில்,
பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, நேரடி செலவுக் குறைப்பு நடவடிக்கையாக, அடுத்த 15 நாட்களுக்குள் 228 அரசியல் நியமனங்களை அடுத்த 15 நாட்களுக்குள் நீக்குமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
இதில் 7 இராஜாங்க அமைச்சர்கள், 43 பிரதி அமைச்சர்கள், 109 சிரேஷ்ட அரசியல் பணிப்பாளர்கள் மற்றும் 69 அரசியல் பணிப்பாளர்களின் நியமனங்கள் அடங்கின்றன.
இந்த நடவடிக்கை மூலம் அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து மாதத்துற்கு 5.714 மில்லியன் மலேசிய ரிங்கிட்கள் சேமிக்கப்படும் என்றார்.