2025-26 ஆண்களுக்கான ஆஷஸ் தொடருக்கான திகதிகள் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியானது 2025 நவம்பர் 21 ஆம் திகதி பெர்த்தில் ஆரம்பமாகும்.
இதன் மூலம் 43 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பெர்த் ஆஷஸ் தொடரின் தொடக்க ஆட்டத்தை நடத்துகிறது.
இரண்டாவது போட்டி பகலிரவு ஆட்டமாக 2025 டிசம்பர் 4-8 வரை பிரிஸ்பேனில் நடைபெறும்.
மூன்றாவது போட்டி அடிலெய்ட்டில் 2025 டிசம்பர் 17-21 வரையும் நான்காவது போட்டி 2025 டிசம்பர் 26-30 வரையும் மற்றும் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி சிட்டினியில் 2026 ஜனவரி 04-08 ஆம் திகதி வரையும் நடைபெறும்.