துருக்கியின் கிழக்குப் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 9 கிலோமீட்டர் (5.6 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக EMSC குறிப்பிட்டுள்ளது.
ஹசாகா, டெய்ர் அல் சோர் மற்றும் அலெப்போ மாகாணங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சிரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் சேதங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாவில்லை.
2023 பெப்ரவரி 6, அன்று துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 53,500 க்கும் மேற்பட்ட துருக்கியர்களும் அண்டை நாடுகளில் கிட்டத்தட்ட 6,000 பேரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.