எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி இன்று (18) ஆகும்.
இதுவரை தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாத வாக்காளர்களுக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தலுக்காக 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின.
இருந்தபோதும் அவற்றில், அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் மாத்திரமே தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்ததாகவும் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.