”ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பகுதியில் நேற்று (17) இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.