ஹப்புத்தளை பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
ஹப்புத்தளை – தம்பேதனை பகுதியில் குறித்த வேன் வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.