ராகமை தேவத்த தம்புவ சந்தி கிளை வீதியில் மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் ஒன்றின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தலியத்தபாலுவ, ராகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.