நிபுணர்கள் நீண்ட காலமாக புகைபிடிப்பதை எதிர்த்து எச்சரித்து வருகின்றனர், இது ஒரு பெரிய உடல்நலக் கேடு விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதிய தொல்பொருள் ஆய்வொன்று, புகைப்பிடிப்பவர்களின் எலும்புகளில் அவர்கள் இறந்த பிறகும் பல நூற்றாண்டுகளுக்கு புகையிலை தங்கியிருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆய்வாளர்கள், 12 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பிரிட்டனில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்தனர்.
இதன்போது, புகையிலை அவர்களின் எலும்புகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதை அவதானித்துள்ளனர்.
எலும்பு முறிவுகளின் அதிக ஆபத்து போன்ற எலும்பு தொடர்பான நிலைமைகளில் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
500 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஐரோப்பாவில் புகையிலை பாவனை அறிமுகமானது.
இந்த நிலையில் மனித எலும்புக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை புகையிலை ஏற்படுத்தியதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.