முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று (21) வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் கூறினார்.