தலைநகர் அங்காராவிற்கு அருகிலுள்ள துருக்கியின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TUSAS) தலைமையகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புதன்கிழமை (23) நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
எனினும் இந்தத் தாக்குதல் குர்திஷ் புரட்சிக் குழுவால் (PKK) நடத்தப்பட்டிருக்கலாம் என்று துருக்கிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தலைநகருக்கு வெளியே சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நுழைவாயிலைச் சுற்றி குறைந்தது இரண்டு பேர் துப்பாக்கியால் சுடுவதை காட்டும் இது தொடர்பான வீடியோக்கள் சமூக தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பயங்கரவாதிகளை அடையாளம் காணும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர், அதற்கேற்ப பயங்கரவாதக் குழுவின் பெயர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.