உள்நாட்டு சந்தைகளில் தேங்காய், அரிசி, முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் மக்களின் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் நடமாடும் சேவையின் ஊடாக தேங்காய் விற்பனை செய்றவதற்கு அரசாங்கத்தினால் நேற்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் நடமாடும் விற்பனை நிலையம் ஊடாக அரசாங்கம் தேங்காய் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என்ற போதிலும் தேங்காய் விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அசேல சம்பத் தெரிவித்துள்ளதாவது” தேங்காய் விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இன்று மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. தேங்காய் இந்தியாவில் இருந்தோ பாகிஸ்தானில் இருந்தோ அல்லது வியட்னாமில் இருந்தோ கொண்டுவரப்படுவதில்லை.
அவை எமது நாட்டில் விளைகின்றன.எனவே தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறுவது ஒரு வித மோசடியாகும்.
எனவே ஜனாதிபதி உடனடியாக தேங்காய்க்கு கட்டுப்பாட்டு விலையிளை அறிமுகப்படுத்த வேண்டும்” இவ்வாறு நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.