தென்கொரியா தனது வான்பரப்பிற்குள் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) மூன்று முறை அனுப்பியதாக அணு ஆயுதம் கொண்ட வடகொரியா குற்றம் சாட்டியது.
எனினும் இந்த குற்றச்சாட்டை தென்கொரியா மறுத்துள்ளது.
வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் விபத்துக்குள்ளான “எதிரி ஆளில்லா விமானத்தின்” பாகங்களை மீட்டதாக கூறியுள்ளது.
வடகொரிய அரச செய்திச் சேவையான KCNA யினால் வெளியிட்ட புகைப்படங்கள் பியோங்யாங்கில் விபத்துக்குள்ளான சியோலின் ஆளில்லா விமானங்களை எடுத்துக் காட்டுகின்றன.
தென் கொரிய ட்ரோன்கள் இந்த மாதத்தில் குறைந்தது மூன்று முறை வடகொரியாவின் வான்வெளியில் நுழைந்ததா குற்றம் சாட்டப்படுகிறது.