எல்பிட்டிய பிரதேச சபையின் 15 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கும், எஞ்சிய 15 ஆசனங்கள் எதிர் தரப்பினருக்கும் செல்வதில் பிரச்சினை ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் நிஷாந்த பெரேரா நியமிக்கப்பட உள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 30 ஆசனங்களைக் கொண்ட எல்பிட்டிய பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது