கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னின் கிழக்கு பிராந்தியங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 211 ஆக அதிகரித்துள்ளது.
ஐந்து தசாப்தங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மோசனமான வானிலையால் பாதிக்கப்பட்ட மற்றும் காணாமல் போன நபர்களை தேடும் பணிகளில் ஸ்பெய்ன் மீட்பு படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது நவீன வரலாற்றில் ஸ்பெய்னில் ஏற்பட்ட மோசமான வெள்ளமாகவும், 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐரோப்பாவை தாக்கிய மிக கொடூரமான பேரழிவாகவும் அமைந்துள்ளது.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சில நிமிடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் ஸ்பெய்னின் கிழக்கு பிராந்தியங்களில் அமைந்துள்ள கட்டிடங்களையும், வீடுகளையும் அடித்துச் சென்றது.
ஆறுகள் அவற்றின் கரைகளை கடந்து பெருக்கெடுத்தமையினால், வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் அழிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.