மிதிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எட்டு சந்தேக நபர்களை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவிரினர் கைது செய்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபர், குற்றத்தின் பின்னர் துப்பாக்கி மற்றும் 05 தோட்டாக்களை வைத்திருந்த சந்தேக நபர் மற்றும் குற்றத்திற்கு உதவிய மேலும் 05 சந்தேகநபர்கள் நேற்று (03) வெல்லவாய, அஹங்கம மற்றும் மிதிகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்கள் பின்னர், மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், ஆயுதம் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அஹங்கம, வெலிகம மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 42 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.














