முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு எதிரான நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2017ஆம் ஆண்டு, வேலைவாய்ப்பளிப்பதாக உறுதியளித்து 50,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருடக கடூழிய சிறைத் தண்டனையை முன்னர் விதித்திருந்தது.
இலங்கை மின்சார சபையில் (CEB) வேலை வாங்கித் தருவதாக கூறி பெண் ஒருவரிடம் இருந்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்படிருந்தது.