பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது தீவிர பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இந்த வகையில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க மஹியங்கனை பகுதியில் உள்ள பழங்குடியினர் வசிப்பிடத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு ஊருவரிகயே வன்னிலத்தவை சந்தித்து சுமூகமாக கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என பழங்குடியினர் வழிபாடுகளையும் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க ” பழங்குடியினர் தலைமுறையை பாதுகாக்க வேண்டும் எனவும், அவர்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஆதிவாசிகளின் வரலாறு
மிகவும் பெறுமதி வாய்ந்தது எனவும், அதனையும் பேணிபாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது கட்சியில் பழங்குடியினருக்கு முன்னுரிமையளிக்கப்படுமெனவும், தாம் பழங்குடியினருடன் இணைந்து செயற்பட எதிர்ப்பார்த்திருப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.