தொடர்ச்சியான ஊழல்களை அடுத்து காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 600 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்த ஆண்டில் மார்ச் 31 வரையிலான காலக் கட்டத்தில் 593 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு வேலைக்குத் திரும்புவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து காவல்துறைக் கல்லூரி செவ்வாய்க்கிழமை (05) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பாலியல் குற்றங்கள் மற்றும் தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட 74 அதிகாரிகளும், சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட 18 அதிகாரிகளும் அடங்குவர்.
அத்துடன், நேர்மையின்மை மற்றும் பாரபட்சமான நடத்தைக்காக முறையே 125 மற்றும் 71 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.