இன்று (13) பிற்பகல் மலையக ரயில் மார்க்கத்தின் ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாரிய கற்கள் வீழ்ந்தமையினால் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த பொடிமனிக்கே ரயில் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் மழையுடன், ஒஹிய இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் கற்கள் விழுந்துள்ளன.
அவ்வேளையில் அந்த நிலையத்தில் இருந்து இயங்கிக்கொண்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த 1005 இலக்க ரயில் புகையிரத சாரதியின் சாமர்த்தியத்தால் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த 1596 இலக்க சரக்கு கலப்பு ரயில் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் பாதையில் விழுந்து கிடக்கும் கற்களை விரைவில் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.