நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியுள்ளதாகவும், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கலந்துகொண்ட விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் நடுங்கேணி, மன்னார் மற்றும் பயகம பகுதியைச் சேர்ந்த 49, 19 மற்றும் 26 வயதுடையவர்களாவர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறாயினும் எந்தவொரு இடத்திலும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகவில்லை எனவும் இதனால் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் மாலை வேளையில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் அனைவரும் கூடிய விரைவில் வாக்களிக்க வருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்