3 முதல் 4 வயதுக்குட்பட்ட முன்பள்ளி சிறுவர்கள் 17 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தலாவ ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பள்ளி பாடசாலையின் தோட்டத்தில் காணப்பட்ட மாமரத்திலிருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.