ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று 11.30 மணியளவில் தனது கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தினார்.
குறித்த உரையில், இது மிக முக்கியமான பாராளுமன்ற கூட்டமாகும் என தெரிவித்தார். இதுவரை நாட்டில் இருந்த இரு பெரும்பான்மை கட்சிகளுக்கு மத்தியில் மக்களின் ஆதரவோடு இன்று பாராளுமன்றின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளோம்.
இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் சிறப்பான சந்தர்ப்பம் ஆகும் என தெரிவித்தார். இம்முறை சபைக்கு புதிய உறுப்பினர்கள் பலர் தெரிவிசெய்யப்பட்டுள்ளதோடு, அனைத்து மாகாணங்களிலும் இருந்து வருகை தந்துள்ளனர்.
இதுவரை ஜாதி , மதம், இனம் என்ற ரீதியில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வந்தனர். இம்முறை அது அனைத்தும் மாற்றமடைந்துள்ளது. இதனால் இனம் , மதம் என மக்களிடையே இருந்த இடைவெளி குறைந்து ஒரு தான் மக்கள் என ஒன்றிணைந்துள்ளனர்.
இவை அனைத்தையும் மறந்து மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து நாட்டின் ஆட்சியை கையளித்தமைக்கு நன்றி தெரிவித்தார். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப எமக்கு வாக்களித்த , வாக்களிக்காத அனைத்து மக்களினதும் தேவைகளையும் பூர்த்தி செய்வோம்.
இனி எம்நாட்டில் இன பேதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதுவரையில், பாராளுமன்றில் நடந்த செயற்பாடுகள் பல மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இனி பாராளுமன்றின் கௌரவம் காக்கப்படுவதோடு, மக்களுக்கு பாராளுமன்றின் மீதான நம்பிக்கையும் பேணப்படும் என தெரிவித்தார்.
தற்போது நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல பல்வேறு திட்டங்கள் முக்கெடுக்கப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான 3ஆவது பணியாளர் மட்ட உடன்படிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் கைச்சாத்திட அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காளரா்களாக இருந்து உதவ முன்வர வேண்டும் .
4 மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் ஈர்த்து , அதன் மூலம் 8 மில்லியன் ரூபாய் வரையான வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
தொழில்நுட்ப துறையில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளளோம்.
விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கான அனைத்து வளங்களும் நம் நாட்டில் இருக்கின்றது. இதன் மூலம், கடனற்ற விவசாயிகளை உருவாக்கி தன்னிறைவு பொருாளதாரத்தை வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளாம்.
கடல் வளத்தில் இருந்து முழுமையான பலனை பெற எதிர்பார்த்துள்ளளோம்.
கல்வி துறையில், பாரிய முன்னேற்றத்தை கொண்டு வந்து , டிஜிட்டல் முறைமையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம்.
என்பது சூழலையும் , பாராளுமன்றையும் சுத்தப்படுத்துவது மட்டும் கிடையாது , ஊழலற்ற , ஆரோக்கியமான , சுதந்திரமான ஒரு நாட்டை உருவாக்குவதுமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப சிறந்த வேதை்திட்டங்களை முன்னெடுத்து செல்ல எதிர்பார்த்துள்ளதோடு, அதற்கு மக்களின் ஆதரவையும் வழங்குமாறும் தெரிவித்தார்.