யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், அனர்த்த ஆபத்து காரணமாக வதிவிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருப்போருக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.