வாராவாரம் வரும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது.
சோமவார வழிபாடு என்று இது சிறப்பித்து சிவபெருமானுக்கு வழிபாடு நடத்தப்பெறுகிறது.
அன்றைய தினம் பிரதோஷம் வந்தால் அது சோமவார பிரதோஷம் என்று மேலும் சிறப்பித்து சொல்லப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஆனால், கார்த்திகை மாதம் வரும் சோமவாரமோ சிவனுக்கு மிக மிக விசேஷமானது.
அன்று சிவபெருமானை விரதம் இருந்து வணங்கி வழிபாடு செய்பவர்களுக்கு கேட்ட வரத்தைக் கொடுப்பாராம் சிவபெருமான்.
பொதுவாக, மாதத்தில் நான்கு அல்லது ஐந்து திங்கட்கிழமைகள் வரும்.
இன்றைய தினம் கார்த்திகை மாத இரண்டாம் சோம வாரம். ஜாதகத்தில் சந்திரன் நீசமாக இருந்தால் ஒருவருக்கு எப்போதும் எல்லா விஷயத்திலும் மனக்குழப்பம் இருக்கும் என்று சொல்வார்கள்.
இவர்கள் இன்றைய தினம் சிவனை விரதம் இருந்து வழிபட்டால் இவர்களுக்கு மனக்குழப்பம் முற்றிலும் நீங்கும் என்று உறுதியாக சொல்லப்படுகிறது.