அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், சீனா மற்றும் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ மீது கூடுதல் வரிகளை விதிக்கும் உறுதிமொழியை அளித்தார்.
சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிப்பதாகவும், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து வரும் அனைத்து பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாகவும் ட்ரம்ப் திங்கள்கிழமை (26) அறிவித்தார்.
புலம்பெயர்ந்தோர் மற்றும் எல்லைகளைத் தாண்டி வரும் சட்டவிரோத போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான புதிய வரிகளை அவர் விதித்தார்.
இந்த வரி விதிப்பானது 2025 ஜனவரியில் ட்ரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றவுடன் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.