கிரீன்லாந்தின் பனிப்பாறைக்கு அடியில் புதைந்துள்ள விசித்திரமான ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, சாட் கிரீன் மற்றும் அவரது குழுவினர் கிரீன்லாந்ன் பனிப்பாறைக்கு அடியில்1959 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தளத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தளம் ஆர்க்டிக்கில் இருந்து அணு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்காவின் சோதனை தளமாக செயல்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரலில் ஒரு ஆய்வுப் பயணத்தின் போது, ரேடார் கருவிகளைச் சுமந்து சென்ற விமானம் கிரீன்லாந்தின் பனிக்கட்டியின் ஆழத்தையும் அதன் கீழே உள்ள பாறை அடுக்குகளையும் வரைபடமாக்கியது.
இதன்போதே, இதுஉறைந்த தீவின் மேற்பரப்பில் இருந்து 100 அடிக்கு கீழே புதைந்தருந்த நிலையில் பனிப்போர் கால இராணுவ தளம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முகாம் 21 சுரங்கப்பாதைகளால் ஆனது, மொத்தம் 9,800 அடி நீளம் கொண்டது.
இது அணு ஏவுகணைகளை வைப்பதற்கு பனிக்கு அடியில் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
இது சோவியத் யூனியனை குறிவைக்கக்கூடிய ஒரு மொபைல் ஏவுகணை அமைப்பை உருவாக்கியது.
இருப்பினும், பனிக்கட்டியின் நிலையற்ற தன்மை இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை, மேலும் அது இறுதியில் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.