உலகின் மிக வயதான மனிதர் ஜோன் டினிஸ்வுட் (John Tinniswood) தனது 112 வயதில் உயிரிழந்தார் என்று கின்னஸ் உலக சாதனைகள் செவ்வாயன்று (26) தெரிவித்தன.
இவர் இரண்டு உலகப் போர்கள் மற்றும் இரண்டு உலகளாவிய தொற்றுநோய்களிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் மூழ்கிய அதே ஆண்டில் பிறந்த டினிஸ்வுட், வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சவுத்போர்ட் நகரில் உள்ள தனது பராமரிப்பு இல்லத்தில் தனது கடைசி மூச்சை விடுத்தார்.
டின்னிஸ்வுட் ஆகஸ்ட் 1912 இல் லிவர்பூலில் பிறந்தார், 1942 இல் திருமணம் செய்து கொண்டார், இரண்டாம் உலகப் போருக்கு மத்தியில் அவர் ரோயல் ஆர்மி பே கார்ப்ஸின் ஒரு பகுதியாக இருந்தார்.
பின்னர் அவர் எண்ணெய் துறையில் கணக்காளராக பணிபுரிந்து 60 வயதில் ஓய்வு பெற்றார்.
அவரது குடும்ப உறுப்பினர்களில் அவரது மகள், நான்கு பேரக்குழந்தைகள் மற்றும் மூன்று கொள்ளு பேரக்குழந்தைகள் இருந்தனர்.
இவரது மனைவி 1986 இல் காலமானார்.
மறைந்த ராணி எலிசபெத், அவருக்கு 100 வயதை எட்டியதிலிருந்து 2022 இல் இறக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் டினிஸ்வுடுக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டை அனுப்பி உள்ளார்.