சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று அமெரிக்கர்கள் ஜோ பைடனின் நிர்வாகம் கைதிகள் இடமாற்றம் தொடர்பில் பீஜிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மார்க் ஸ்விடன், கை லி மற்றும் ஜோன் லியுங் ஆகிய அமெரிக்க கைதிகளே விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பல ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் இணைவர்கள் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (என்எஸ்சி) செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை (27) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வொஷிங்டன்-பீஜிங் கைதிகள் பரிமாற்றத்தின் ஓர் அங்கமாக இந்த விடுவிப்பு வந்துள்ளது.
பல மாதங்களாக நடந்து வரும் இந்த பரிமாற்றத்தில் அமெரிக்க காவலில் உள்ள ஓரு சீன பிரஜையை விடுவிப்பதும் அடங்கும்.