வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26, 32 மற்றும் 56 வயதுடைய வெலிமடை மற்றும் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடமிருந்து அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.