இந்திய கடற்பரப்பில் அண்மையில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகையிலான போதைப்பொருட்கள் அடங்கிய இலங்கை மீன்பிடி படகுகள் இன்று (02) கொழும்பு, துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கொழும்பு, துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
சுமார் 500 கிலோ கிராம் எடையுள்ள கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருட்களுடன் குறித்த மீன்பிடி படகு கடந்த வாரம் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
நவம்பர் 24, 25 ஆம் திகதிகளில் இந்திய கடற்படையினர் இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபர்களை கைது செய்து கப்பல்களைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், மீன்பிடி படகுகள் இரண்டு மற்றும் சந்தேக நபர்கள் நவம்பர் 29 அன்று இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.