கொழும்பு, பத்தரமுல்லை – இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு கட்டிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்திரை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
தம்மை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு கோரியே அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கல்வி அமைச்சுக்கு முன்பாக கொட்டாவை – பொரளை வீதி (174 பஸ் பாதை) போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.