தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி (Gerald Coetzee), இடுப்பு காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
அதேநேரம், 24 வயதான வலது கை வேகப் பந்து வீச்சாளர், டிசம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாஸ்தானுக்கு எதிரான அனைத்து வடிவ கிரிக்கெட் தொடரினையும் தவறவிட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.
இலங்கைக்கு எதிரான டர்பனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் பந்துவீசும்போது காயம் அடைந்த கோட்ஸி, ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்ட பின்னர், அவரது வலது இடுப்பில் தசைப்பிடிப்பு இருப்பது தெரியவந்தது.
இதனால், அவர் ஆறு வாரங்கள் வரை ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்டில் அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகா அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டிகளில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 5 ஆம் திகதி க்கெபெர்ஹாவில் ஆரம்பமாகும்.
அதன் பின்னர், பாகிஸ்தானுடனு மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா விளையாடும்.