பிலிப்பைன்ஸில் அழிந்து வரும் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸின், Maguindanao del Norte மாகாணத்தில் உள்ள ஒரு கடலோர நகரத்தில் கடந்த வாரம் இந்த உணவை சாப்பிட்டதிலிருந்து பல பழங்குடி டெடுரே மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்பு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 1 ஆம் திகதி நிலவரப்படி, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 31 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த நவம்பர் 25ஆம் தேதி பிடிபட்ட கடல் ஆமையின் இறைச்சியை உட்கொண்டதாகக் கூறப்படும் Maguindanao del Norte இல் உள்ள Barangay Linao, Datu Blah Sinsuat ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் பலியானதாக Baguindali கூறினார்.
பிலிப்பைன்ஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கடல் ஆமைகளை வேட்டையாடுவது அல்லது உட்கொள்வது சட்டவிரோதமானது.
எனினும், கடல் உயிரினங்கள் இன்னும் சில சமூகங்களில் பாரம்பரிய உணவாக உண்ணப்படுகின்றன.