கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான N’Zerekore இல் கால்பந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட நெரிசல் மற்றும் வன்முறையில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை உறுதியாக தெரியவராத நிலையில், வைத்தியசாலை வட்டாரங்கள் தற்காலிமாக இறப்பு குறைந்தது 100 ஆக பதிவாகியதாக கூறியது.
ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் 200,000 மக்கள் வசிக்கும் Nzerekore இல் ஒரு கால்பந்து போட்டியின் போது வன்முறை வெடித்தது.
அங்கு போட்டி ரசிகர்கள் சர்ச்சைக்குரிய நடுவரின் முடிவைத் தொடர்ந்து களத்திற்குள் நுழைந்ததாக செய்தித் தளமான Guineenews செய்தி வெளியிட்டுள்ளது.
வைத்தியசாலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உயிரிழந்தவர்களின் உடல்கள் காணப்படுகின்றன, பிணவறைகள் நிரம்பியுள்ளதனால், ஏனையவர்களின் உடல்கள் நடைபாதையில் கிடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வன்முறை குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள கினியாவின் பிரதமர் Bah oury, சம்பவத்தை கண்டித்ததுடன், அமைதியாக இருக்குமாறும் பொது மக்களிடம் வலியுறுத்தினார்.