கொவிட் தொற்றுநோய் உலகைப் பேரழிவிற்கு உட்படுத்திய பல ஆண்டுகளுக்குப் பின்னர், வைரஸ் சீனவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியின் தலைமையிலான ஹவுஸ் செலக்ட் துணைக்குழுவானது 1.1 மில்லியன் அமெரிக்கர்களைக் கொன்ற தொற்று நோய் குறித்த இரண்டு ஆண்டு கால விசாரணையை நிறைவு செய்த பின்னர் மேற்கண்ட அறிவிப்பினை திங்களன்று (2) வெளியிட்டது.
AFP செய்தி நிறுவனத்தின்படி, குழுவானது 25 கூட்டங்கள், 30 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை மதிப்பாய்வு செய்த பின்னர் அதன் முடிவை எட்டியது.
520 பக்க அறிக்கையானது மத்திய, மாநில அளவிலான பதில்கள், வைரஸின் தோற்றம், தடுப்பூசி முயற்சிகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தது.
இந்த ஆய்வானது அமெரிக்காவுக்கும், உலகிற்கும் அடுத்த தொற்றுநோயைக் கணிக்கவும் அவற்றிலிருந்து தயாராகவும், அடுத்த தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், அடுத்த தொற்றுநோயைத் தடுக்கவும் உதவும் என்று குழுவின் குடியரசுக் கட்சியின் தலைவர் பிராட் வென்ஸ்ட்ரப் காங்கிரசுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.