நாட்டரிசி, சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசிகளின் மொத்த விலையை அதிகரித்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் ஒரு கிலோ கிராம் நாட்டரிசியின் மொத்த விலை 255 ரூபாயாகவும், சம்பா அரிசி 260 ரூபாயாகவும், கீரி சம்பா 275 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் நாட்டு அரிசியின் கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாகவும் சம்பா 230 ரூபாவாகவும் கீரி சம்பா 260ரூபாவாகவும் விற்பனை செய்யவேண்டுமென நுகர்வோர் அதிகாரசபை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
எனினும் அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை அவ்வப்போது அதிகரிப்பதால் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்க முடியாமல் தவிப்பதாக அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.