தென்கொரியாவின் தேசிய சட்டமன்றம் ஜனாதிபதி யூன் சுக் யோலின் (Yoon Suk Yeol) இராணுவச் சட்ட மூலத்தை தீர்மானமாக இரத்து செய்ததை அடுத்து, நாடு செவ்வாய்க்கிழமை (03) இரவு ஒரு வியத்தகு அரசியல் எழுச்சியைக் கண்டது.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தென் கொரியாவின் முதல் இராணுவச் சட்டத்தை திணிக்க யூனின் அதிர்ச்சி முயற்சி, அதன் நவீன ஜனநாயக வரலாற்றில் நாட்டை அதன் ஆழ்ந்த கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
இது நாடு முழுவதும் பரவலான கோபம் மற்றும் எதிர்ப்புக்களை தூண்டியதுடன், ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரத்தில் பல தசாப்தங்களில் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியது.
ஒரு அவசர நள்ளிரவு அமர்வில், ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 300 சட்டமியற்றுபவர்களில் 190 பேர் ஒருமனதாக இராணுவச் சட்டத்தை நிராகரிப்பதாக வாக்களித்தனர்.
யூனின் சட்டமூலத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்கு பின்னர் இந்த நடவடிக்கை வந்தது.
செவ்வாய்க்கிழமை (03) பிற்பகுதியில் வெளியான திருப்புமுனையான அறிவிப்பு தென்கொரிய சட்டமன்றத்தில் ஒரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியது.
இது அரசியல் நடவடிக்கைகளைத் தடைசெய்து ஊடகங்களைத் தணிக்கை செய்யும் ஜனாதிபதியின் முயற்சியை நிராகரித்தது.
இதையடுத்து ஆயுதம் ஏந்திய படையினர் சியோலில் உள்ள தேசிய சட்டமன்றக் கட்டிடத்தையும் சுற்றிவளைத்தது.
தென் கொரியாவின் தேசிய சட்டமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கூடி, இராணுவச் சட்டத்தை திணிப்பதை எதிர்த்து நாடாளுமன்றத்துக்குள் உட் பிரவேசிக்க முயன்றனர்.
இதனால், சியோலில் உள்ள சட்டமன்றம் அருகே பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் தென் கொரியாவின் தற்காப்புக் கட்டளைப் படைகளின் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் நாடாளுன்றத்தின் பாதுகப்பு பணியினை மேற்கொண்டனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகள், தேசிய சட்டமன்றத்தின் நுழைவாயிலில் பொலிஸ் அதிகாரிகள் காவலில் நிற்பதைக் காட்டியது, அதே நேரத்தில் துப்பாக்கிகளுடன் தலைக்கவசம் அணிந்த வீரர்கள் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க சுற்றளவைப் பாதுகாத்தனர்.
இந்த நிலையில் தென் கொரியாவின் முக்கிய எதிர்க்கட்சி, ஜனாதிபதி யூனை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு யூன் எந்த உடனடி பொது பதிலையும் அளிக்கவில்லை. ஆனால் யூனின் சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டாக இராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ புதன்கிழமை காலை அட்டவணையை ஒத்திவைத்ததாகவும் அவரது அலுவலகம் கூறியது.