தமிழ்நாடு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைத்தீவு கடற்தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகொன்றில் சென்ற இரண்டு கடற்தொழிலாளர்களும், கடற்சீற்றம் காரணமாக தமிழக கடற்பரப்பினுள் தத்தளித்த நிலையில் , தமிழக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இருவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.